மலைபடுகடாம்
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப்
பெருங்கௌசிகனார்
திருமழை தலைஇய விருணிற விசும்பின்
விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத்திண்வார் விசித்த முழவொ டாகுளி
நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டின்
மின்னிரும் பீலி யணித்தழைக் கோட்டொடு 5
கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பி
னிளிப்பயி ரிமிருங் குறும்பரந் தூம்பொடு
விளிப்பது கவருந் தீங்குழ றுதைஇ
நடுவுநின் றிசைக்கு மரிக்குரற் றட்டை
கடிகவர் பொலிக்கும் வல்வா யெல்லரி 10
நொடிதரு பாணிய பதலையும் பிறவுங்
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்
கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பிற்
படுத்துவைத் தன்ன பாறை மருங்கி 15
னெடுத்துநிறுத் தன்ன விட்டருஞ் சிறுநெறி
தொடுத்த வாளியர் துணைபுணர் கானவ
ரிடுக்கண் செய்யா தியங்குந ரியக்கு
மடுக்கன் மீமிசை யருப்பம் பேணா
திடிச்சுர நிவப்பி னியவுக்கொண் டொழுகித் 20
தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவிற்
கடிப்பகை யனைத்துங் கேள்வி போகாக்
குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பி
னரலை தீர வுரீஇ வரகின்
குரல்வார்ந் தன்ன நுண்டுளை யிரீஇச் 25