முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.

Friday, March 20, 2015

பட்டினப்பாலை-மரபு மூலம்


பட்டினப்பாலை
கடியலூர் உருத்திரங்கண்ணனார்

 
வசையில்புகழ் வயங்குவெண்மீன்
றிசைதிரிந்து தெற்கேகினுந்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினுந் தான்பொய்யா                                     5
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்
விளைவறா வியன்கழனிக்
கார்க்கரும்பின் கமழாலைத்
தீத்தெறுவிற் கவின்வாடி                                                    10
நீர்ச்செறுவி னீணெய்தற்
பூச்சாம்பும் புலத்தாங்கத்
காய்ச்செந்நெற் கதிரருந்து
மோட்டெறுமை முழுக்குழவி
கூட்டுநிழற் றுயில்வதியுங்                                                 15
கோட்டெங்கிற் குலைவாழைக்
காய்கமுகிற் கமழ்மஞ்ச
ளினமாவி னிணர்ப்பெண்ணை
முதற்சேம்பின் முளையிஞ்சி
யகனகர் வியன்முற்றத்துச்                                                 20
சுடர்நுதன் மடநோக்கி
னேரிழை மகளி ருணங்குணாக் கவருங்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு
முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்                            25



விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக்
கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக்
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு
வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி                                  30
பணைநிலைப் புரவியி னணைமுதற் பிணிக்குங்
கழிசூழ்படப்பைக் கலியாணர்ப்
பொழிற்புறவிற் பூந்தண்டலை
மழைநீங்கிய மாவிசும்பின்
மதிசேர்ந்த மகவெண்மீ                                                       35
னுறுகெழுதிற லுயர்கோட்டத்து
முருகமர்பூ முரண்கிடக்கை
வரியணிசுடர் வான்பொய்கை
யிருகாமத் திணையேரிப்
புலிப்பொறிப் போர்க்கதவிற்                                                40
றிருத்துஞ்சுந் திண்காப்பிற்
புகழ்நிலைஇய மொழிவளர
வறநிலைஇய வகனட்டிற்
சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
யாறுபோலப் பரந்தொழுகி                                                   45
யேறுபொரச் சேறாகித்
தேரோடத் துகள்கெழுமி
நீறாடிய களிறுபோல
வேறுபட்ட வினையோவத்து
வெண்கோயின் மாசூட்டுந்                                                  50
தண்கேணித் தகைமுற்றத்துப்
பகட்டெருத்தின் பலசாலைத்
தவப்பள்ளித் தாழ்காவி
னவிர்சடை முனிவ ரங்கி வேட்கு
மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம்                           55
மாயிரும் பெடையோ டிரியல் போகிப்
பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்
தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கு
முதுமரத்த முரண்களரி
வரிமண லகன்றிட்டை                                                        60
யிருங்கிளை யினனொக்கற்
கருந்தொழிற் கலிமாக்கள்
கடலிறவின் சூடுதின்றும்
வயலாமைப் புழுக்குண்டும்
வறளடும்பின் மலர்மலைந்தும்                                         65
புனலாம்பற் பூச்சூடியு
நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக்
கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப்                       70
பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ
திருஞ்செருவி னிகன்மொய்ம்பினோர்
கல்லெறியுங் கவண்வெரீஇப்
புள்ளிரியும் புகர்ப்போந்தைப்
பறழ்ப்பன்றிப் பல்கோழி                                                      75
யுறைக்கிணற்றுப் புறச்சேரி
மேழகத் தகரொடு சிவல்விளை யாடக்
கிடுகுநிரைத் தெஃகூன்றி
நடுகல்லி னரண்போல
நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய                                        80
குறுங்கூரைக் குடிநாப்ப
ணிலவடைந்த விருள்போல
வலையுணங்கு மணன்முன்றில்
வீழ்த்தாழைத் தாட்டாழ்ந்த
வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர்                        85
சினைச்சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினான்
மடற்றாழை மலர்மலைந்தும்
பிணர்ப்பெண்ணை பிழிமாந்தியும்
புன்றலை யிரும்பரதவர்                                                     90
பைந்தழைமா மகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லா
துவவுமடிந் துண்டாடியும்
புலவுமணற் பூங்கானன்
மாமலை யணைந்த கொண்மூப் போலவுந்                    95
தாய்முலை தழுவிய குழவி போலவுந்
தேறுநீர்ப் புணரியோ டியாறுதலை மணக்கு
மலியோதத் தொலிகூடற்
றீதுநீங்கக் கடலாடியு
மாசுபோகப் புனல்படிந்து                                                     100
மலவ னாட்டியு முரவுத்திரை யுழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டு
மகலாக் காதலொடு பகல்விளை யாடிப்
பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்
பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத்                            105
துணைப்புணர்ந்த மடமங்கையர்
பட்டுநீக்கித் துகிலுடுத்து
மட்டுநீக்கி மதுமகிழ்ந்து
மைந்தர் கண்ணி மகளிர் சூடவு
மகளிர் கோதை மைந்தர் மலையவு                                110
நெடுங்கான் மாடத் தொள்ளெரி நோக்கிக்
கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுட ரெண்ணவும்
பாட லோர்த்து நாடக நயந்தும்
வெண்ணிலவின் பயன்றுய்த்துங்
கண்ணடைஇய கடைக்கங்குலான்                                     115
மாஅகாவிரி மணங்கூட்டுந்
தூஉவெக்கர்த் துயின்மடிந்து
வாலிணர் மடற்றாழை
வேலாழி வியன்றெருவி
னல்லிறைவன் பொருள்காக்குந்                                         120
தொல்லிசைத் தொழின்மாக்கள்
காய்சினத்த கதிர்ச்செல்வன்
றேர்பூண்ட மாஅபோல
வைகறொறு மசைவின்றி
யுல்குசெயக் குறைபடாது                                                   125
வான்முகந்தநீர் மலைப்பொழியவு
மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவு
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்தேற்றவு
நிலத்தினின்று நீர்ப்பரப்பவு                                                 130
மளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
யருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி                                               135
மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடைப் போரேறி
மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்
வரையாடு வருடைத் தோற்றம் போலக்
கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை                              140
யேழகத் தகரோ டுகளு முன்றிற்
குறுந்தொடை நெடும்படிக்காற்
கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற்
புழைவாயிற் போகிடைகழி
மழைதோயு முயர்மாடத்துச்                                              145
சேவடிச் செறிகுறங்கிற்
பாசிழைப் பகட்டல்குற்
றூசுடைத் துகிர்மேனி
மயிலியன் மானோக்கிற்
கிளிமழலை மென்சாயலோர்                                             150
வளிநுழையும் வாய்பொருந்தி
யோங்குவரை மருங்கி னுண்டா துறைக்குங்
காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன
செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்                         155
குழலகவ யாழ்முரல
முழவதிர முரசியம்ப
விழவறா வியலாவணத்து
மையறு சிறப்பிற் றெய்வஞ் சேர்த்திய
மலரணி வாயிற் பலர்தொழு கொடியும்                          160
வருபுன றந்த வெண்மணற் கான்யாற்
றுருகெழு கரும்பி னொண்பூப் போலக்
கூழுடைக் கொழுமஞ்சிகைத்
தாழுடைத் தண்பணியத்து
வாலரிசிப் பலிசிதறிப்                                                          165
பாகுகுத்த பசுமெழுக்கிற்
காழூன்றிய கவிகிடுகின்
மேலூன்றிய துகிற்கொடியும்
பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரிய                                                170
ருறழ்குறித் தெடுத்த வுருகெழு கொடியும்
வெளிலிளக்குங் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்றுறைத்
தூங்குநாவாய் துவன்றிருக்கை
மிசைக்கூம்பி னசைக்கொடியு                                            175
மீன்றடிந்து விடக்கறுத்
தூன்பொரிக்கு மொலிமுன்றின்
மணற்குவைஇ மலர்சிதறிப்
பலர்புகுமனைப் பலிப்புதவி
னறவுநொடைக் கொடியொடு                                             180
பிறபிறவு நனிவிரைஇப்
பல்வே றுருவிற் பதாகை நீழற்
செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற்
செல்லா னல்லிசை யமரர் காப்பி
னீரின் வந்த நிமிர்பரிப் புரவியுங்                                      185
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னுங்
குடமலைப் பிறந்த வாரமு மகிலுந்
தென்கடன் முத்துங் குணகடற் றுகிருங்
கங்கை வாரியுங் காவிரிப் பயனு                                     190
மீழத் துணவுங் காழகத் தாக்கமு
மரியவும் பெரியவு நெரிய வீண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மருகி
னீர்நாப் பண்ணு நிலத்தின் மேலு
மேமாப்ப வினிதுதுஞ்சிக்                                                    195
கிளைகலித்துப் பகைபேணாது
வலைஞர்முன்றின் மீன்பிறழவும்
விலைஞர்குரம்பை மாவீண்டவுங்
கொலைகடிந்துங் களவுநீக்கியு
மமரர்ப் பேணியு மாவுதி யருத்தியு                                  200
நல்லானொடு பகடோம்பியு
நான்மறையோர் புகழ்பரப்பியும்
பண்ணிய மட்டியும் பசும்பதங் கொடுத்தும்
புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
கொடுமேழி நசையுழவர்                                                     205
நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவு மொப்ப நாடிக்
கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது 210
பல்பண்டம் பகர்ந்துவீசுந்
தொல்கொண்டித் துவன்றிருக்கைப்
பல்லாயமொடு பதிபழகி
வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற்
சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு                                215
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையு
முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய
வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க்                                  220
கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்
பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி
யருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு
நுண்ணிதி னுணர நாடி நண்ணார்                                     225
செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித்
துருகெழு தாய மூழி னெய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்
கடியரண் டொலைத்த கதவுகொன் மருப்பின்
முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றா                          230
ளுகிருடை யடிய வோங்கெழில் யானை
வடிமணிப் புரவியொடு வயவர் வீழப்
பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத்
தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு
வேறுபல் பூளையொ டுழிஞை சூடிப்                                235
பேய்க்க ணன்ன பிளிறுகடி முரச
மாக்க ணகலறை யதிர்வன முழங்க
முனைகெடச் சென்று முன்சம முருக்கித்
தலைதவச் சென்று தண்பணை யெடுப்பி
வெண்பூக் கரும்பொடு செந்நெ னீடி                                 240
மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக்
கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக்
கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச்
செறுவும் வாவியு மயங்கி நீரற்
றறுகோட் டிரலையொடு மான்பிணை யுகளவுங்            245
கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி
யந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ
வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியிற்
பருநிலை நெடுந்தூ ணொல்கத் தீண்டிப்                          250
பெருநல் யானையொடு பிடிபுணர்ந் துறையவு
மருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின்
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரிபுரி நரம்பின் றீந்தொடை யோர்க்கும்
பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துச்                     255
சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி
யழல்வா யோரி யஞ்சுவரக் கதிர்ப்பவு
மழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவுங்
கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப்
பிணந்தின் யாக்கைப் பேய்மக டுவன்றவுங்                     260
கொடுங்கான் மாடத்து நெடுங்கடைத் துவன்றி
விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டி
லொண்சுவர் நல்லி லுயர்திணை யிருந்து
பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த்
தொடுதோ லடியர் துடிபடக் குழீஇக்                                 265
கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட
வுணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து
வளைவாய்க் கூகை நன்பகற் குழறவு
மருங்கடி வரைப்பி னூர்கவி னழியப்
பெரும்பாழ் செய்து மமையான் மருங்கற                       270
மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே
வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத்
தான்முன்னிய துறைபோகலிற்
பல்லொளியர் பணிபொடுங்கத்
தொல்லருவாளர் தொழில்கேட்ப                                       275
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் றிறல்கெடச் சீறி மன்னர்
மன்னெயில் கதுவு மதனுடை நோன்றாண்
மாத்தானை மறமொய்ம்பிற்
செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப்                                   280
புன்பொதுவர் வழிபொன்ற
விருங்கோவேண் மருங்குசாயக்
காடுகொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கிப்
பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக்                         285
கோயிலொடு குடிநிறீஇ
வாயிலொடு புழையமைத்து
ஞாயிறொறும் புதைநிறீஇப்
பொருவேமெனப் பெயர்கொடுத்
தொருவேமெனப் புறக்கொடாது                                         290
திருநிலைஇய பெருமன்னெயின்
மின்னொளி யெறிப்பத் தம்மொளி மழுங்கி
விசிபிணி முழவின் வேந்தர் சூடிய
பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்காற்
பொற்றொடிப் புதல்வ ரோடி யாடவு                                 295
முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவுஞ்
செஞ்சாந்து சிதைந்த மார்பி னொண்பூ
ணரிமா வன்ன வணங்குடைத் துப்பிற்
றிருமா வளவன் றெவ்வர்க் கோக்கிய
வேலினும் வெய்ய கானமவன்                                          300
கோலினுந் தண்ணிய தடமென் றோளே
 

No comments:

Post a Comment