மலைபடுகடாம்
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின் மலை233,திரு9,திரு116,பெரும்135,மது 581
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து திரு 121,மது 560,குறி 49திண் வார் விசித்த முழவொடு ஆகுளி
நுண் உருக்குற்ற விளங்கு அடர் பாண்டில் நெடு 175
மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு 5
கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின் மலை 533
இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ
நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை மது 612
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி 10
நொடி தரு பாணிய பதலையும் பிறவும்
கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப மலை 143
நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர் மலை 365,515
கடு கலித்து எழுந்த கண் அகல் சிலம்பில்
படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின் 15 மது 278
எடுத்து நிறுத்து அன்ன இட்டு அரும் சிறு நெறி
தொடுத்த வாளியர் துணை புணர் கானவர்
இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும் பெரும் 39-41
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது
இடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி 20
தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின் பெரும் 14,15
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா பொரு 18
குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின் திரு 140
அரலை தீர உரீஇ வரகின்
குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ 25 பெரும் 8