முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.

Thursday, March 19, 2015

மதுரைக் காஞ்சி-மரபு மூலம்


மதுரைக்காஞ்சி

மாங்குடி மருதனார்
 

ஓங்குதிரை வியன்பரப்பி
னொலிமுந்நீர் வரம்பாகத்
தேன்றூங்கு முயர்சிமைய
மலைநாறிய வியன்ஞாலத்து
வலமாதிரத்தான் வளிகொட்ப                                   5
வியனாண்மீ னெறியொழுகப்
பகற்செய்யுஞ் செஞ்ஞாயிறு
மிரவுச்செய்யும் வெண்டிங்களு
மைதீர்ந்து கிளர்ந்துவிளங்க
மழைதொழி லுதவ மாதிரங் கொழுக்கத்             10
தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய
நிலனு மரனும் பயனெதிர்பு நந்த
நோயிகந்து நோக்குவிளங்க
மேதக மிகப்பொலிந்த
வோங்குநிலை வயக்களிறு                                     15
கண்டுதண்டாக் கட்கின்பத்
துண்டுதண்டா மிகுவளத்தா
யர்பூரிம விழுத்தெருவிற்
பொய்யறியா வாய்மொழியாற்
புகழ்நிறைந்த நன்மாந்தரொடு                                20       
நல்லூழி யடிப்படரப்
பல்வெள்ள மீக்கூற
வுலக மாண்ட வுயர்ந்தோர் மருக
பிணக்கோட்ட களிற்றுக்குழும்பி
னிணம்வாய்ப்பெய்த பேய்மகளி                           25



ரிணையொலியிமிழ் துணங்கைச்சீர்ப்
பிணையூப மெழுந்தாட
வஞ்சுவந்த போர்க்களத்தா
னாண்டலை யணங்கடுப்பின்
வயவேந்த ரொண்குருதி                                                     30
சினத்தீயிற் பெயர்புபொங்கத்
தெறலருங் கடுந்துப்பின்
விறல்விளங்கிய விழுச்சூர்ப்பிற்
றொடித்தோட்கை துடுப்பாக
வாடுற்ற வூன்சோறு                                                            35
நெறியறிந்த கடிவாலுவ
னடியொதுங்கிப் பிற்பெயராப்
படையோர்க்கு முருகயர
வமர்கடக்கும் வியன்றானைத்
தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற்                          40
றொன்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தா ளருவிப் பொருப்பிற் பொருந
விழுச்சூழிய விளங்கோடைய
கடுஞ்சினத்த கமழ்கடாஅத்
தளறுபட்ட நறுஞ்சென்னிய                                     45
வரைமருளு முயர்தோன்றல
வினைநவின்ற பேர்யானை
சினஞ்சிறந்து களனுழக்கவு
மாவெடுத்த மலிகுரூஉத்துக
ளகல்வானத்து வெயில்கரப்பவும்                                      50
வாம்பரிய கடுந்திண்டேர்
காற்றெனக் கடிதுகொட்பவும்
வாண்மிகு மறமைந்தர்
தோண்முறையான் வீறுமுற்றவு
மிருபெரு வேந்தரொடு வேளிர் சாயப்                             55
பொருதவரைச் செருவென்று
மிலங்கருவிய வரைநீந்திச்
சுரம்போழ்ந்த விகலாற்ற
லுயர்ந்தோங்கிய விழுச்சிறப்பி
னிலந்தந்த பேருதவிப்                                                         60
பொலந்தார் மார்பி னெடியோ னும்பன்
மரந்தின்னூஉ வரையுதிர்க்கு
நரையுருமி னேறனையை
யருங்குழுமிளைக் குண்டுகிடங்கி
னுயர்ந்தோங்கிய நிரைப்புதவி                                            65
னெடுமதி னிரைஞாயி
லம்புமி ழயிலருப்பந்
தண்டாது தலைச்சென்று
கொண்டுநீங்கிய விழுச்சிறப்பிற்
றென்குமரி வடபெருங்கல்                                                  70
குணகுடகட லாவெல்லைத்
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
வெற்றமொடு வெறுத்தொழுகிய
கொற்றவர்தங் கோனாகுவை
வானியைந்த விருமுந்நீர்ப்                                                 75
பேஎநிலைஇய விரும்பௌவத்துக்
கொடும்புணரி விலங்குபோழக்
கடுங்காலொடு கரைசேர
நெடுங்கொடிமிசை யிதையெடுத்
தின்னிசைய முரசமுழங்கப்                                               80
பொன்மலிந்த விழுப்பண்ட
நாடார நன்கிழிதரு
மாடியற் பெருநாவாய்
மழைமுற்றிய மலைபுரையத்
துறைமுற்றிய துளங்கிருக்கைத்                                        85
தெண்கடற் குண்டகழிச்
சீர்சான்ற வுயர்நெல்லி
னூர்கொண்ட வுயர்கொற்றவ
நீர்த்தெவ்வு நிரைத்தொழுவர்
பாடுசிலம்பு மிசையேற்றத்                                                  90
தோடுவழங்கு மகலாம்பியிற்
கயனகைய வயனிறைக்கு
மென்றொடை வன்கிழாஅ
ரதரி கொள்பவர் பகடுபூண் டெண்மணி
யிரும்பு ளோப்பு மிசையே யென்று                                  95
மணிப்பூ முண்டகத்து மணன்மலி கானற்
பரதவர் மகளிர் குரவையொ டொலிப்ப
ஒருசார் விழவுநின்ற வியலாங்கண்
முழவுத்தோண் முரட்பொருநர்க்
குருகெழு பெருஞ்சிறப்பி                                                     100
னிருபெயர்ப் பேராயமொ
டிலங்குமருப்பிற் களிறுகொடுத்தும்
பொலந்தாமரைப் பூச்சூட்டியு
நலஞ்சான்ற கலஞ்சிதறும்
பல்குட்டுவர் வெல்கோவே                                                 105
கல்காயுங் கடுவேனிலொ
டிருவானம் பெயலொளிப்பினும்
வரும்வைகன் மீன்பிறழினும்
வெள்ளமா றாது விளையுள் பெருக
நெல்லி னோதை யரிநர் கம்பலை                                    110
புள்ளிமிழ்ந் தொலிக்கு மிசையே யென்றுஞ்
சலம்புகன்று சுறவுக்கலித்த
புலவுநீர் வியன்பௌவத்து
நிலவுக்கானன் முழவுத்தாழைக்
குளிர்ப்பொதும்பர் நளித்தூவ                                              115
னிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
யிருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொ
டொலியோவாக் கலியாணர்
முதுவெள்ளிலை மீக்கூறும்
வியன்மேவல் விழுச்செல்வத்                                           120
திருவகையா னிசைசான்ற
சிறுகுடிப் பெருந்தொழுவர்
குடிகெழீஇய நானிலவரொடு
தொன்றுமொழிந்து தொழில்கேட்பக்
காலென்னக் கடிதுராஅய்                                                     125
நாடுகெட வெரிபரப்பி
யாலங்கானத் தஞ்சுவரவிறுத்
தரசுபட வமருளக்கி
முரசுகொண்டு களம்வேட்ட
வடுதிறலுயர் புகழ்வேந்தே                                                 130
நட்டவர் குடியுயர்க்குவை
செற்றவ ரரசுபெயர்க்குவை
பேருலகத்து மேஎந்தோன்றிச்
சீருடைய விழுச்சிறப்பின்
விளைந்துமுதிர்ந்த விழுமுத்தி                                         135
னிலங்குவளை யிருஞ்சேரிக்
கட்கொண்டிக் குடிப்பாக்கத்து
நற்கொற்கையோர் நசைப்பொருந
செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்
றஞ்சுவரத் தட்கு மணங்குடைத் துப்பிற்                         140
கோழூஉன்குறைக் கொழுவல்சிப்
புலவுவிற் பொலிகூவை
யொன்றுமொழி யொலியிருப்பிற்
றென்பரதவர் போரேறே
யரியவெல்லா மெளிதினிற்கொண்                                    145
டுரிய வெல்லா மோம்பாது வீசி
நனிபுகன் றுறைது மென்னா தேற்றெழுந்து
பனிவார் சிமையக் கானம் போகி
யகநாடு புக்கவ ரருப்பம் வௌவி
யாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து             150
மேம்பட மரீஇய வெல்போர்க் குருசி
லுறுசெறுநர் புலம்புக்கவர்
கடிகாவி னிலைதொலைச்சி
யிழிபறியாப் பெருந்தண்பணை
குரூஉக்கொடிய வெரிமேய                                                155
நாடெனும்பேர் காடாக
வாசேந்தவழி மாசேப்ப
வூரிருந்தவழி பாழாக
விளங்குவளை மடமங்கையர்
துணங்கையஞ்சீர்த் தழூஉமறப்ப                                       160
வவையிருந்த பெரும்பொதியிற்
கவையடிக் கடுநோக்கத்துப்
பேய்மகளிர் பெயர்பாட
வணங்குவழங்கு மகலாங்க
ணிலத்தாற்றுங் குழூஉப்புதவி                                           165
னரந்தைப் பெண்டி ரினைந்தன ரகவக்
கொழும்பதிய குடிதேம்பிச்
செழுங்கேளிர் நிழல்சேர
நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக்
குடுமிக் கூகை குராலொடு முரலக்                                   170
கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கைக்
களிறுமாய் செருந்தியொடு கண்பமன் றூர்தர
நல்லேர் நடந்த நகைசால் விளைவயற்
பன்மயிர்ப் பிணவொடு கேழ லுகள
வாழா மையின் வழிதவக் கெட்டுப்                                 175
பாழா யினநின் பகைவர் தேஎ
மெழாஅத்தோ ளிமிழ்முழக்கின்
மாஅத்தா ளுயர்மருப்பிற்
கடுஞ்சினத்த களிறுபரப்பி
விரிகடல் வியன்றானையொடு                                          180
முருகுறழப் பகைத்தலைச்சென்
றகல்விசும்பி னார்ப்பிமிழப்
பெயலுறழக் கணைசிதறிப்
பலபுரவி நீறுகைப்ப
வளைநரல வயிரார்ப்பப்                                                     185
பீடழியக் கடந்தட்டவர்
நாடழிய வெயில்வௌவிச்
சுற்றமொடு தூவறுத்தலிற்
செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப
வியன்கண் முதுபொழின் மண்டில முற்றி                      190
யரசியல் பிழையா தறநெறி காட்டிப்
பெரியோர் சென்ற வடிவழிப் பிழையாது
குடமுதற் றோன்றிய தொன்றுதொழு பிறையின்
வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றங்
குணமுதற் றோன்றிய வாரிருண் மதியிற்                      195
றேய்வன கெடுகநின் றெவ்வ ராக்க
முயர்நிலை யுலக மமிழ்தொடு பெறினும்
பொய்சே ணீங்கிய வாய்நட் பினையே
முழங்குகட லேணி மலர்தலை யுலகமொ
டுயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்             200
பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழு கலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
பழிநமக் கெழுக வென்னாய் விழுநிதி
யீத லுள்ளமொ டிசைவேட் குவையே                             205
யன்னாய் நின்னொடு முன்னிலை யெவனோ
கொன்னொன்று கிளக்குவ லடுபோ ரண்ணல்
கேட்டிசின் வாழி கெடுகநின் னவலங்
கடாது நிலைஇயர்நின் சேண்விளங்கு நல்லிசை
தவாப்பெருக்கத் தறாயாண                                                210
ரழித்தானாக் கொழுந்திற்றி
யிழித்தானாப் பலசொன்றி
யுண்டானாக் கூர்நறவிற்
றின்றானா வினவைக
னிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப்                 215
பயனற வறியா வளங்கெழு திருநகர்
நரம்பின் முரலு நயம்வரு முரற்சி
விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப்
பாண ருவப்பக் களிறுபல தரீஇக்
கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ                             220
மறங்கலங்கத் தலைச்சென்று
வாளுழந்ததன் றாள்வாழ்த்தி
நாளீண்டிய நல்லகவர்க்குத்
தேரொடு மாசிதறிச்
சூடுற்ற சுடர்ப்பூவின்                                                            225
பாடுபுலர்ந்த நறுஞ்சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்ற மாகக்
கள்ளி னிரும்பைக் கலஞ்செல வுண்டு
பணிந்தோர் தேஎந் தம்வழி நடப்பப்
பணியார் தேஎம் பணித்துத்திறை கொண்மார்                230
பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறைப்
படுகண் முரசங் காலை யியம்ப
வெடிபடக் கடந்து வேண்டுபுலத் திறுத்த
பணைகெழு பெருந்திறற் பல்வேன் மன்னர்
கரைபொரு திரங்குங் கனையிரு முந்நீர்த்                       235
திரையிடு மனலினும் பலரே யுரைசெல
மலர்தலை யுலக மாண்டுகழிந் தோரே
அதனால் குணகடல் கொண்டு குடகடன் முற்றி
யிரவு மெல்லையும் விளிவிட னறியா
தவலு மிசையு நீர்த்திரள் பீண்டிக்                         240
கவலையங் குழும்பி னருவி யொலிப்பக்
கழைவளர் சாரற் களிற்றின நடுங்க
வரைமுத லிரங்கு மேறொடு வான்ஞெமிர்ந்து
சிதரற் பெரும்பெயல் சிறத்தலிற் றாங்காது
குணகடற் கிவர்தருங் குரூஉப்புன லுந்தி             245
நிவந்துசெ னீத்தங் குளங்கொளச் சாற்றிக்
களிறுமாய்க்குங் கதிர்க்கழனி
யொளிறிலஞ்சி யடைநிவந்த
முட்டாள சுடர்த்தாமரை
கட்கமழு நறுநெய்தல்                                                          250
வள்ளித ழவிழ்நீல
மெல்லிலை யரியாம்பலொடு
வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கைக்
கம்புட் சேவ லின்றுயி லிரிய
வள்ளை நீக்கி வயமீன் முகந்து                                        255
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
வேழப் பழனத்து நூழி லாட்டுக்
கரும்பி னெந்திரங் கட்பி னோதை
யள்ளற் றங்கிய பகடுறு விழுமங்
கள்ளார் களமர் பெயர்க்கு மார்ப்பே                                  260
யொலிந்த பகன்றை விளைந்த கழனி
வன்கை வினைஞ ரரிபறை யின்குரற்
றளிமழை பொழியுந் தண்பரங் குன்றிற்
கலிகொள் சும்மை யொலிகொ ளாயந்
ததைந்த கோதை தாரொடு பொலியப்                              265
புணர்ந்துட னாடு மிசையே யனைத்து
மகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்பக்
குருகுநரல மனைமரத்தான்
மீன்சீவும் பாண்சேரியொடு
மருதஞ் சான்ற தண்பணை சுற்றி                         270
யொருசார்ச் சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக்
கருங்கால் வரகி னிருங்குரல் புலர
வாழ்ந்த குழும்பிற் றிருமணி கிளர
வெழுந்த கடற்றி னன்பொன் கொழிப்பப்
பெருங்கவின் பெற்ற சிறுதலை நௌவி                         275
மடக்கட் பிணையொடு மறுகுவன வுகளச்
சுடர்ப்பூங் கொன்றை தாஅய நீழற்
பாஅ யன்ன பாறை யணிந்து
நீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும்
வெள்ளி யன்ன வொள்வீ யுதிர்ந்து                                   280
சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்
மணிமரு ணெய்த லுறழக் காமர்
துணிநீர் மெல்லவற் றொய்யிலொடு மலர
வல்லோன் றைஇய வெறிக்களங் கடுப்ப
முல்லை சான்ற புறவணிந் தொருசார்                            285
நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த் தோரை நெடுங்கா லையவி
யைவன வெண்ணெலொ டரில்கொள்பு நீடி
யிஞ்சி மஞ்சட் பைங்கறி பிறவும்
பல்வேறு தாரமொடு கல்லகத் தீண்டித்                            290
தினைவிளை சாரற் கிளிகடி பூசன்
மணிப்பூ வவரைக் குரூஉத்தளிர் மேயு
மாமா கடியுங் கானவர் பூசல்
சேணோ னகழ்ந்த மடிவாய்ப் பயம்பின்
வீழ்முகக் கேழ லட்ட பூசல்                                               295
கருங்கால் வேங்கை யிருஞ்சினைப் பொங்கர்
நறும்பூக் கொய்யும் பூச லிருங்கே
ழேறடு வயப்புலிப் பூசலொ டனைத்து
மிலங்குவெள் ளருவியொடு சிலம்பகத் திரட்டக்
கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்                           300
தருங்கடி மாமலை தழீஇ யொருசா
ரிருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப
நிழத்த யானை மேய்புலம் படரக்
கலித்த வியவ ரியந்தொட் டன்ன
கண்விடு புடையூஉத் தட்டை கவினழிந்             305
தருவி யான்ற வணியின் மாமலை
வைகண் டன்ன புன்முளி யங்காத்துக்
கமஞ்சூழ் கோடை விடரக முகந்து
காலுறு கடலி னொலிக்குஞ் சும்மை
யிலைவேய் குரம்பை யுழையதட் பள்ளி                        310
யுவலைக் கண்ணி வன்சொ லிளைஞர்
சிலையுடைக் கையர் கவலை காப்ப
நிழலுரு விழந்த வேனிற்குன் றத்துப்
பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார்
முழங்குகட றந்த விளங்குகதிர் முத்த                             315
மரம்போழ்ந் தறுத்த கண்ணே ரிலங்குவளை
பரதர் தந்த பல்வேறு கூல
மிருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழுமீன் குறைஇய துடிக்கட் டுணியல்                        320
விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கல னுய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும்
வைக றோறும் வழிவழிச் சிறப்ப
நெய்தல் சான்ற வளம்பல பயின்றாங்                             325
கைம்பாற் றிணையுங் கவினி யமைவர
முழவிமிழு மகலாங்கண்
விழவுநின்ற வியன்மறுகிற்
றுணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரி
யின்கலி யாணர்க் குழூஉப்பல பயின்றாங்குப்                330
பாடல் சான்ற நன்னாட்டு நடுவட்
கலைதாய வுயர்சிமையத்து
மயிலகவு மலிபொங்கர்
மந்தி யாட மாவிசும் புகந்து
முழங்குகால் பொருத மரம்பயில் காவி                          335
னியங்குபுனல் கொழித்த வெண்தலைக் குவவுமணற்
கான்பொழி றழீஇய வடைகரை தோறுந்
தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய்க்
கோதையி னொழுகும் விரிநீர் நல்வர
லவிரறல் வையைத் துறைதுறை தோறும்                    340
பல்வேறு பூத்திரட் டண்டலை சுற்றி
யழுந்துபட் டிருந்த பெரும்பா ணிருக்கையு
நிலனும் வளனுங் கண்டமை கல்லா
விளங்குபெருந் திருவின் மான விறல்வே
ளழும்பி லன்ன நாடிழந் தனருங்                                      345
கொழும்பல் பதிய குடியிழந் தனருந்
தொன்றுகறுத் துறையுந் துப்புத்தர வந்த
வண்ணல் யானை யடுபோர் வேந்த
ரின்னிசை முரச மிடைப்புலத் தொழியப்
பன்மா றோட்டிப் பெயர்புறம் பெற்று                                350
மண்ணுற வாழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
தொல்வலி நிலைஇய வணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மலையி னிவந்த மாடமொடு                       355
வையை யன்ன வழக்குடை வாயில்
வகைபெற வெழுந்து வான மூழ்கிச்
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்
யாறுகிடந் தன்ன வகனெடுந் தெருவிற்
பல்வேறு குழாஅத் திசையெழுந் தொலிப்ப                    360
மாகா லெடுத்த முந்நீர் போல
முழங்கிசை நன்பணை யறைவனர் நுவலக்
கயங்குடைந் தன்ன வியந்தொட் டிமிழிசை
மகிழ்ந்தோ ராடுங் கலிகொள் சும்மை
யோவுக்கண் டன்ன விருபெரு நியமத்துச்                      365
சாறயர்ந் தெடுத்த வுருவப் பல்கொடி
வேறுபல் பெயர வாரெயில் கொளக்கொள
நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி
நீரொலித் தன்ன நிலவுவேற் றானையொடு
புலவுப்படக் கொன்று மிடைதோ லோட்டிப்                     370
புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி
கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல
பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப்
பெருவரை மருங்கி னருவியி னுடங்கப்
பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின்                     375
வீங்குபிணி நோன்கயி றரீஇ யிதைபுடையூக்
கூம்புமுதன் முருங்க வெற்றிக் காய்ந்துடன்
கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல
விருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து                   380
கோலோர்க் கொன்று மேலோர் வீசி
மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக்
கந்துநீத் துழிதருங் கடாஅ யானையு
மங்கண்மால் விசும்பு புதைய வளிபோழ்ந்
தொண்கதிர் ஞாயிற் றூறளவாத் திரிதருஞ்                    385
செங்கா லன்னத்துச் சேவ லன்ன
குரூஉமயிர்ப் புரவி யுராலிற் பரிநிமிர்ந்து
காலெனக் கடுக்குங் கவின்பெறு தேருங்
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலி
னடிபடு மண்டிலத் தாதி போகிய                                       390
கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும்
வேழத் தன்ன வெருவரு செலவிற்
கள்ளார் களம ரிருஞ்செரு மயக்கமு
மரியவும் பெரியவும் வருவன பெயர்தலிற்
றீம்புழல் வல்சிக் கழற்கான் மழவர்                                 395
பூந்தலை முழவி னோன்றலை கடுப்பப்
பிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர்
பலவகை விரித்த வெதிர்பூங் கோதையர்
பலர்தொகு பிடித்த தாதுகு சுண்ணத்தர்
தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய்                          400
நீடுகொடி யிலையினர் கோடுசுடு நூற்றின
ரிருதலை வந்த பகைமுனை கடுப்ப
வின்னுயி ரஞ்சி யின்னா வெய்துயிர்த்
தேங்குவன ரிருந்தவை நீங்கிய பின்றைப்
பல்வேறு பண்ணியந் தழீஇத்திரி விலைஞர்                  405
மலைபுரை மாடத்துக் கொழுநிழ லிருத்தர
விருங்கடல் வான்கோடு புரைய வாருற்றுப்
பெரும்பின் னிட்ட வானரைக் கூந்தலர்
நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர்
செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை                            410
செல்சுடர்ப் பசுவெயிற் றோன்றி யன்ன
செய்யர் செயிர்த்த நோக்கினர் மடக்க
ணைஇய கலுழு மாமையர் வையெயிற்று
வார்ந்த வாயர் வணங்கிறைப் பணைத்தோட்
சோர்ந்துகு வன்ன வயக்குறு வந்திகைத்             415
தொய்யில் பொறித்த சுணங்கெதி ரிளமுலை
மையுக் கன்ன மொய்யிருங் கூந்தன்
மயிலிய லோரு மடமொழி யோருங்
கைஇ மெல்லிதி னொதுங்கிக் கையெறிந்து
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப்                        420
புடையமை பொலிந்த வகையமை செப்பிற்
காம ருருவிற் றாம்வேண்டு பண்ணியங்
கமழ்நறும் பூவொடு மனைமனை மறுக
மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொரு திரங்கு முந்நீர் போலக்                                  425
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
கழுநீர் கொண்ட வெழுநா ளந்தி
யாடுதுவன்று விழவி னாடார்த் தன்றே
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூட
னாளங் காடி நனந்தலைக் கம்பலை                                 430
வெயிற்கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச்
செக்க ரன்ன சிவந்துநுணங் குருவிற்
கண்பொரு புகூஉ மொண்பூங் கலிங்கம்
பொன்புனை வாளொடு பொலியக் கட்டித்
திண்டேர்ப் பிரம்பிற் புரளுந் தானைக்                              435
கச்சந் தின்ற கழறயங்கு திருந்தடி
மொய்ம்பிறந்து திரிதரு மொருபெருந் தெரியன்
மணிதொடர்ந் தன்ன வொண்பூங் கோதை
யணிகிளர் மார்பி னாரமொ டளைஇக்
காலியக் கன்ன கதழ்பரி கடைஇக்                                    440
காலோர் காப்பக் காலெனக் கழியும்
வான வண்கை வளங்கெழு செல்வர்
நாண்மகி ழிருக்கை காண்மார் பூணொடு
தெள்ளரிப் பொற்சிலம் பொலிப்ப வொள்ளழற்
றாவற விளங்கிய வாய்பொ னவிரிழை                          445
யணங்குவீழ் வன்ன பூந்தொடி மகளிர்
மணங்கமழ் நாற்றந் தெருவுடன் கமழ
வொண்குழை திகழு மொளிகெழு திருமுகந்
திண்கா ழேற்ற வியலிரு விலோதந்
தெண்கடற் றிரையி னசைவளி புடைப்ப             450
நிரைநிலை மாடத் தரமியந் தோறு
மழைமாய் மதியிற் றோன்றுபு மறைய
நீரு நிலனுந் தீயும் வளியு
மாக விசும்போ டைந்துட னியற்றிய
மழுவா ணெடியோன் றலைவ னாக                                455
மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சுடர்
வாடாப் பூவி னிமையா நாட்டத்து
நாற்ற வுணவி னுருகெழு பெரியோர்க்கு
மாற்றரு மரபி னுயர்பலி கொடுமா
ரந்தி விழவிற் றூரியங் கறங்கத்                                      460
திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை
யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்
தாமு மவரு மோராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்                                   465     
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்துபுறங் காக்குங் கடவுட் பள்ளியுஞ்
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீ ரெய்திய வொழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத் தொருதா மாகி                                     470
யுயர்நிலை யுலக மிவணின் றெய்து
மறநெறி பிழையா வன்புடை நெஞ்சிற்
பெரியோர் மேஎ யினிதி னுறையுங்
குன்றுகுயின் றன்ன வந்தணர் பள்ளியும்
வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப்                      475
பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉ மமயமு
மின்றிவட் டோன்றிய வொழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
சான்ற கொள்கை சாயா யாக்கை                                      480
யான்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல்பொளிந் தன்ன விட்டுவாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக்
கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து                           485
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்கி
யிறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையுங்
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற
வச்சமு மவலமு மார்வமு நீக்கிச்
செற்றமு முவகையுஞ் செய்யாது காத்து                        490
ஞெமன்கோ லன்ன செம்மைத் தாகிச்
சிறந்த கொள்கை யறங்கூ றவையமு
நறுஞ்சாந்து நீவிய கேழ்கிள ரகலத்
தாவுதி மண்ணி யவிர்துகின் முடித்து
மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல                          495
நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி
யன்பு மறனு மொழியாது காத்துப்
பழியொரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களு
மறநெறி பிழையா தாற்றி னொழுகிக்                              500
குறும்பல் குழுவிற் குன்றுகண் டன்ன
பருந்திருந் துகக்கும் பன்மா ணல்லிற்
பல்வேறு பண்டமோ டூண்மலிந்து கவினி
மலையவு நிலத்தவு நீரவும் பிறவும்
பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு          505
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரு
மழையொழுக் கறாஅப் பிழையா விளையுட்
பழையன் மோகூ ரவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன
தாமேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவுங்                      510
கோடுபோழ் கடைநருந் திருமணி குயினருஞ்
சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும்
பொன்னுரை கண்மருங் கலிங்கம் பகர்நருஞ்
செம்புநிறை கொண்மரும் வம்புநிறை முடிநரும்
பூவும் புகையு மாயு மாக்களு                                            515
மெவ்வகைச் செய்தியு முவமங் காட்டி
நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற்
கண்ணுள் வினைஞரும் பிறருங் கூடித்
தெண்டிரை யவிரறல் கடுப்ப வொண்பல்
குறியவு நெடியவு மடிதரூஉ விரித்துச்                            520
சிறியரும் பெரியருங் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினுங் காலுற நிற்றரக்
கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்துந்
தண்கட னாட னொண்பூங் கோதை
பெருநா ளிருக்கை விழுமியோர் குழீஇ                           525
விழைவுகொள் கம்பலை கடுப்பப் பலவுடன்
சேறு நாற்றமும் பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்
பல்வே றுருவிற் காயும் பழனுங்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி                      530
மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகு
மமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேரூன் சோறுங்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவு
மின்சோறு தருநர் பல்வயி னுகர                                      535
வாலிதை யெடுத்த வளிதரு வங்கம்
பல்வேறு பண்ட மிழிதரும் பட்டினத்
தொல்லெ னிமிழிசை மானக் கல்லென
நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப்
பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை யோத                   540
மிருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந்
துருகெழு பானாள் வருவன பெயர்தலிற்
பல்வேறு புள்ளி னிசையெழுந் தற்றே
யல்லங் காடி யழிதரு கம்பலை
யொண்சுட ருருப்பொளி மழுங்கச் சினந்தணிந்து          545
சென்ற ஞாயிறு நன்பகற் கொண்டு
குடமுதற் குன்றஞ் சேரக் குணமுத
னாண்முதிர் மதியந் தோன்றி நிலாவிரிபு
பகலுரு வுற்ற விரவுவர நயந்தோர்
காத லின்றுணை புணர்மா ராயிதழ்த்                               550
தண்ணறுங் கழுநீர் துணைப்ப விழைபுனையூஉ
நன்னெடுங் கூந்த னறுவிரை குடைய
நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக
மென்னூற் கலிங்கங் கமழ்புகை மடுப்பக்                       
பெண்மகிழ் வுற்ற பிணைநோக்கு மகளிர்                       555
நெடுஞ்சுடர் விளக்கங் கொளீஇ நெடுநக
ரெல்லை யெல்லா நோயொடு புகுந்து
கல்லென் மாலை நீங்க நாணுக்கொள                             
வேழ்புணர் சிறப்பி னின்றொடைச் சீறியாழ்
தாழ்பெயற் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து      560
வீழ்துணை தழீஇ வியல்விசும்பு கமழ
நீர்திரண் டன்ன கோதை பிறக்கிட்
டாய்கோ லவிர்தொடி விளங்க வீசிப்                              
போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ
மேதகு தகைய மிகுநல மெய்திப்                                     565
பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்
திறந்துமோந் தன்ன சிறந்துகமழ் நாற்றத்துக்
கொண்டன் மலர்ப்புதன் மானப்பூ வேய்ந்து
நுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கி
மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்து                           570
சேயரு நணியரு நலனயந்து வந்த
விளம்பல் செல்வர் வளந்தப வாங்கி
நுண்டா துண்டு வறும்பூத் துறக்கு
மென்சிறை வண்டின மானப் புணர்ந்தோர்
நெஞ்சே மாப்ப வின்றுயி றுறந்து                                    575
பழந்தேர் வாழ்க்கைப் பறவை போலக்
கொழுங்குடிச் செல்வரும் பிறரு மேஎய
மணம்புணர்ந் தோங்கிய வணங்குடை நல்லி
லாய்பொன் னவிர்தொடிப் பாசிழை மகளி
ரொண்சுடர் விளக்கத்துப் பலருடன் றுவன்றி                 580
நீனிற விசும்பி லமர்ந்தன ராடும்
வானவ மகளிர் மானக் கண்டோர்
நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்
யாம நல்யாழ் நாப்ப ணின்ற
முழவின் மகிழ்ந்தன ராடிக் குண்டுநீர்ப்                           585
பனித்துறைக் குவவுமணன் முனைஇ மென்றளிர்க்
கொழுங்கொம்பு கொழுதி நீர்நனை மேவர
நெடுந்தொடர்க் குவளை வடிம்புற வடைச்சி
மணங்கமழ் மனைதொறும் பொய்த லயரக்
கணங்கொ ளவுணர்க் கடந்த பொலந்தார்             590
மாயோன் மேய வோண நன்னாட்
கோணந் தின்ற வடுவாழ் முகத்த
சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை
மறங்கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறா துற்ற வடுப்படு நெற்றிச்                                         595
சுரும்பார் கண்ணிப் பெரும்புகன் மறவர்
கடுங்களி றோட்டலிற் காணுந ரிட்ட
நெடுங்கரைக் காழக நிலம்பர லுறுப்பக்
கடுங்கட் டேறன் மகிழ்சிறந்து திரிதரக்
கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து                                   600
பணைத்தேந் திளமுலை யமுத மூறப்
புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீ ரயரத்
திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணிக்
குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி                          605
நுண்ணீ ராகுளி யிரட்டப் பலவுட
னொண்சுடர் விளக்க முந்துற மடையொடு
நன்மா மயிலின் மென்மெல வியலிக்
கடுஞ்சூன் மகளிர் பேணிக் கைதொழுது
பெருந்தோட் சாலினி மடுப்ப வொருசா                           610
ரருங்கடி வேலன் முருகொடு வளைஇ
யரிக்கூ டின்னியங் கறங்கநேர் நிறுத்துக்
கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
சீர்மிகு நெடுவேட் பேணித் தழூஉப்பிணையூஉ
மன்றுதொறு நின்ற குரவை சேரிதொறு                          615
முரையும் பாட்டு மாட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்
பேரிசை நன்னன் பெறும்பெயர் நன்னாட்
சேரி விழவி னார்ப்பெழுந் தாங்கு
முந்தை யாமஞ் சென்ற பின்றைப்                                   620
பணிலங் கலியவிந் தடங்கக் காழ்சாய்த்து
நொடைநவி னெடுங்கடை யடைத்து மடமத
ரொள்ளிழை மகளிர் பள்ளி யயர
நல்வரி யிறாஅல் புரையு மெல்லடை
யயிருருப் புற்ற வாடமை விசயங்                                   625
கவவொடு பிடித்த வகையமை மோதகந்
தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவன ருறங்க
விழவி னாடும் வயிரியர் மடியப்
பாடான் றவிந்த பனிக்கடல் புரையப்
பாயல் வளர்வோர் கண்ணினிது மடுப்பப்                        630
பானாட் கொண்ட கங்கு லிடையது
பேயு மணங்கு முருவுகொண் டாய்கோற்
கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப
விரும்பிடி மேஎந்தோ லன்ன விருள்சேர்பு
கல்லு மரனுந் துணிக்குங் கூர்மைத்                                635
தொடலை வாளர் தொடுதோ லடியர்
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச்
சிறந்த கருமை நுண்வினை நுணங்கற
னிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
மென்னூ லேணிப் பன்மாண் சுற்றினர்                             640
நிலனக ழுளியர் கலனசைஇக் கொட்குங்
கண்மா றாடவ ரொடுக்க மொற்றி
வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக் கண்ண ரஞ்சாக் கொள்கைய
ரறிந்தோர் புகழ்ந்த வாண்மையர் செறிந்த                      645
நூல்வழிப் பிழையா நுணங்குநுண் டேர்ச்சி
யூர்காப் பாள ரூக்கருங் கணையினர்
தேர்வழங்கு தெருவி னீர்திரண் டொழுக
மழையமைந் துற்ற வரைநா ளமயமு
மசைவில ரெழுந்து நயம்வந்து வழங்கலிற்                   650
கடவுள் வழங்குங் கையறு கங்குலு
மச்ச மறியா தேம மாகிய
மற்றை யாமம் பகலுறக் கழிப்பிப்
போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கைத்
தாதுண் டும்பி போது முரன்றாங்                                      655
கோத லந்தணர் வேதம் பாடச்
சீரினிது கொண்டு நரம்பினி தியக்கி
யாழோர் மருதம் பண்ணக் காழோர்
கடுங்களிறு கவளங் கைப்ப நெடுந்தேர்ப்
பணைநிலைப் புரவி புல்லுணாத் தெவிட்டப்                  660
பல்வேறு பண்ணியக் கடைமெழுக் குறுப்பக்
கள்ளோர் களிநொடை நுவல வில்லோர்
நயந்த காதலர் கவவுப்பிணித் துஞ்சிப்
புலர்ந்துவிரி விடிய லெய்த விரும்பிக்
கண்பொரா வெறிக்கு மின்னுக்கொடி புரைய                   665
வொண்பொ னவிரிழை தெழிப்ப வியலித்
திண்சுவர் நல்லிற் கதவங் கரைய
வுண்டுமகிழ் தட்ட மழலை நாவிற்
பழஞ்செருக் காளர் தழங்குகுர றோன்றச்
சூதர் வாழ்த்த மாகதர் நுவல                                             670
வேதா ளிகரொடு நாழிகை யிசைப்ப
விமிழ்முர சிரங்க வேறுமாறு சிலைப்பப்
பொறிமயிர் வாரணம் வைகறை யியம்ப
யானையங் குருகின் சேவலொடு காம
ரன்னங் கரைய வணிமயி லகவப்                                    675
பிடிபுணர் பெருங்களிறு முழங்க முழுவலிக்
கூட்டுறை வயமாப் புலியொடு குழும
வான நீங்கிய நீனிற விசும்பின்
மின்னுநிமிர்ந் தனைய ராகி நறவுமகிழ்ந்து
மாணிழை மகளிர் புலந்தனர் பரிந்த                                680
பரூஉக்கா ழாரஞ் சொரிந்த முத்தமொடு
பொன்சுடு நெருப்பி னிலமுக் கென்ன
வம்மென் குரும்பைக் காய்படுபு பிறவுந்
தருமணன் முற்றத் தரிஞிமி றார்ப்ப
மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப                          685
விரவுத்தலைப் பெயரு மேம வைகறை
மைபடு பெருந்தோண் மழவ ரோட்டி
யிடைப்புலத் தொழிந்த வேந்துகோட் டியானை
பகைப்புலங் கவர்ந்த பாய்பரிப் புரவி
வேல்கோ லாக வாள்செல நூறிக்                         690
காய்சின முன்பிற் கடுங்கட் கூளிய
ரூர்சுடு விளக்கிற் றந்த வாயமு
நாடுடை நல்லெயி லணங்குடைத் தோட்டி
நாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாடர வந்த விழுக்கல மனைத்துங்                                  690
கங்கையம் பேரியாறு கடற்படர்ந் தாஅங்
களந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு
புத்தே ளுலகங் கவினிக் காண்வர
மிக்குப்புக ழெய்திய பெரும்பெயர் மதுரைச்
சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ                           700
யொண்பூம் பிண்டி யவிழ்ந்த காவிற்
சுடர்பொழிந் தேறிய விளங்குகதிர் ஞாயிற்
றிலங்குகதி ரிளவெயிற் றோன்றி யன்ன
தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை
நிலம்விளக் குறுப்ப மேதகப் பொலிந்து                           705
மயிலோ ரன்ன சாயன் மாவின்
தளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத்
தீர்க்கி னரும்பிய திதலையர் கூரெயிற்
றொண்குழை புணரிய வண்டாழ் காதிற்
கடவுட்கயத் தமன்ற சுடரிதழ்த் தாமரைத்                      710
தாதுபடு பெரும்போது புரையும் வாண்முகத்
தாய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்து
கோதையிற் பொலிந்த சேக்கைத் துஞ்சித்
திருந்துதுயி லெடுப்ப வினிதி னெழுந்து
திண்கா ழார நீவிக் கதிர்விடு                                             715
மொண்கா ழாரங் கவைஇய மார்பின்
வரிக்கடைப் பிரச மூசுவன மொய்ப்ப
வெருத்தந் தாழ்ந்த விரவுப்பூந் தெரியற்
பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம்
வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச்                  720
சோறமை வுற்ற நீருடைக் கலிங்க
முடையணி பொலியக் குறைவின்று கவைஇ
வல்லோன் றைஇய வரிப்புனை பாவை
முருகியன் றன்ன வுருவினை யாகி
வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத்                          725
தொன்னா ரோட்டிய செருப்புகன் மறவர்
வாள்வலம் புணர்ந்தநின் றாள்வலம் வாழ்த்த
வில்லைக் கவைஇக் கணைதாங்கு மார்பின்
மாதாங் கெறுழ்த்தோண் மறவர்த் தம்மின்
கல்லிடித் தியற்றிய விட்டுவாய்க் கிடங்கி                       730
னல்லெயி லுழந்த செல்வர்த் தம்மின்
கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த
மாக்கண் முரச மோவில கறங்க
வெரிநிமிர்ந் தன்ன தானை நாப்பட்
பெருநல் யானை போர்க்களத் தொழிய                           735
விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்
புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பை
நீர்யா ரென்னாது முறைகருதுபு சூட்டிக்
காழ்மண் டெஃகமொடு கணையலைக் கலங்கிப்
பிரிபிணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து                        740
வானத் தன்ன வளநகர் பொற்ப
நோன்குறட் டன்ன வூன்சாய் மார்பி
னுயர்ந்த வுதவி யூக்கலர்த் தம்மி
னிவந்த யானைக் கணநிரை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியற்                              745
பெருஞ்செ யாடவர்த் தம்மின் பிறரும்
யாவரும் வருக வேனோருந் தம்மென
வரையா வாயிற் செறாஅ திருந்து
பாணர் வருக பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருகென                       750
விருங்கிளை புரக்கு மிரவலர்க் கெல்லாங்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசிக்
களந்தோருங் கள்ளரிப்ப
மரந்தோறு மைவீழ்ப்ப
நிணவூன்சுட் டுருக்கமைய                                                  755
நெய்கனிந்து வறையார்ப்பக்
குரூஉக்குய்ப்புகை மழைமங்குலிற்
பரந்துதோன்றா வியனகராற்
பல்சாலை முதுகுடுமியி
னல்வேள்வித் துறைபோகிய                                              760
தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பி
னிலந்தரு திருவி னெடியோன் போல
வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர்
பலர்வாய்ப் புகரறு சிறப்பிற் றோன்றி                              765
யரியதந்து குடியகற்றிப்
பெரியகற் றிசைவிளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீ னடுவட் டிங்கள் போலவும்
பூத்த சுற்றமோடு பொலிந்தினிது விளங்கிப்                    770
பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்
பெரும்பெயர் மாறன் றலைவ னாகக்
கடந்தடு வாய்வா ளிளம்பல் கோச
ரியனெறி மரபினின் வாய்மொழி கேட்பப்
பொலம்பூ ணைவ ருட்படப் புகழ்ந்த                                775
மறமிகு சிறப்பிற் குறுநில மன்ன
ரவரும் பிறருந் துவன்றிப்
பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந் தேத்த
விலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறன் மடுப்ப நாளு                                     780
மகிழ்ந்தினி துறைமதி பெரும
வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே
 

No comments:

Post a Comment