முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.

Wednesday, March 18, 2015

பொருநராற்றுப்படை-மரபு மூலம்


பொருநராற்றுப்படை
முடத்தாமக்கண்ணியார்
 

      அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்ச்
       சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது
       வேறுபுல முன்னிய விரகறி பொருந
       குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல்
5     விளக்கழ லுருவின் விசியுரு பச்சை
        யெய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற்
        றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப்
        பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
        யளைவா ழலவன் கண்கண் டன்ன
10    துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி
         யெண்ணாட் டிங்கள் வடிவிற் றாகி
        யண்ணா வில்லா வமைவரு வறுவாய்ப்
        பாம்பணந் தன்ன வோங்கிரு மறுப்பின்
        மாயோண் முன்கை யாய்தொடி கடுக்குங்
15    கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவி
          னாய்தினை யரிசி யவைய லன்ன
         வேய்வை போகிய விரலுளர் நரம்பிற்
          கேள்வி போகிய நீள்விசித் தொடையன்
         மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன
20    வணங்குமெய்ந் நின்ற வமைவரு காட்சி
          யாறலை கள்வர் படைவிட வருளின்
         மாறுதலை பெயர்க்கு மருவின் பாலை
         வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்துஞ்
         சீருடை நன்மொழி நீரொடு சிதறி
25    யறல்போற் கூந்தற் பிறைபோற் றிருநுதற்


கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்க

ணிலவிதழ் புரையு மின்மொழித் துவர்வாய்ப்

பலவுரு முத்திற் பழிதீர் வெண்பன்

மயிர்குறை கருவி மாண்கடை யன்ன

30    பூங்குழை யூசற் பொறைசால் காதி

னாணடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தி

னாடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை

நெடுவரை மிசைய காந்தண் மெல்விரற்

கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகி

35    ரணங்கென வுருத்த சுணங்கணி யாகத்

தீர்க்கிடை போகா வேரிள வனமுலை

நீர்ப்பெயர்ச் சுழியி னிறைந்த கொப்பூ

ழுண்டென வுணரா வுயவு நடுவின்

வண்டிருப் பன்ன பல்கா ழல்கு

40    லிரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கிற்

பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப

வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி

யரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற்

பரற்பகை யுழந்த நோயொடு சிவணி

45    மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்கு

ணன்பக லந்தி நடையிடை விலங்கலிற்

பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி

பாடின பாணிக் கேற்ப நாடொறுங்

களிறு வழங்கதர்க் கானத் தல்கி

50    யிலையின் மராத்த வெவ்வந் தாங்கி

வலைவலந் தன்ன மென்னிழன் மருங்கிற்

காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றைப்

பீடுகெழு திருவிற் பெரும்பெயர் நோன்றாண்

முரசுமுழங்கு தானை மூவருங் கூடி

55    யரசவை யிருந்த தோற்றம் போலப்

பாடல் பற்றிய பயனுடை யெழாஅற்

கோடியர் தலைவ கொண்ட தறிந

வறியா மையி னெறிதிரிந் தொராஅ

தாற்றெதிர்ப் படுதலு நோற்றதன் பயனே

60    போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந

வாடுபசி யுழந்தநின் னிரும்பே ரொக்கலொடு

நீடுபசி யொராஅல் வேண்டி னீடின்

றெழுமதி வாழி யேழின் கிழவ

பழுமர முள்ளிய பறவையின் யானுமவ

65    னிழுமென் சும்மை யிடனுடை வரைப்பி

னசையுநர்த் தடையா நன்பெரு வாயி

லிசையேன் புக்கென் னிடும்பை தீர

வெய்த்த மெய்யே னெய்யே னாகிப்

பைத்த பாம்பின் றுத்தி யேய்ப்பக்

70    கைக்கச டிருந்தவென் கண்ணகன் றடாரி

யிருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர்

வெள்ளி முளைத்த நள்ளிருள் விடிய

லொன்றியான் பெட்டா வளவையி னொன்றிய

கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி

75    வேளாண் வாயில் வேட்பக் கூறிக்

கண்ணிற் காண நண்ணுவழி யிரீஇப்

பருகு வன்ன வருகா நோக்கமோ

டுருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ

யீரும் பேணு மிருந்திறை கூடி

80    வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த

துன்னற் சிதாஅர் துவர நீக்கி

நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்

தரவுரி யன்ன வறுவை நல்கி

மழையென மருளு மகிழ்செய் மாடத்

85    திழையணி வனப்பி னின்னகை மகளிர்

போக்கில் பொலங்கல நிறையப் பல்கால்

வாக்குபு தரத்தர வருத்தம் வீட

வார வுண்டு பேரஞர் போக்கிச்

செருக்கொடு நின்ற காலை மற்றவன்

90    றிருக்கிளர் கோயி லொருசிறைத் தங்கித்

தவஞ்செய் மாக்க டம்முடம் பிடாஅ

ததன்பய மெய்திய வளவை மான

வாறுசெல் வருத்த மகல நீக்கி

யனந்தர் நடுக்க மல்ல தியாவது

95    மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து

மாலை யன்னதோர் புன்மையுங் காலைக்

கண்டோர் மருளும் வண்டுசூழ் நிலையுங்

கனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப

வல்லஞர் பொத்திய மனமகிழ் சிறப்பக்

100   கல்லா விளைஞர் சொல்லிக் காட்டக்

கதுமெனக் கரைந்து வம்மெனக் கூஉ

யதன்முறை கழிப்பிய பின்றைப் பதனறிந்து

துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்

பராஅரை வேவை பருகெனத் தண்டிக்

105   காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை

யூழி னூழின் வாய்வெய் தொற்றி

யவையவை முனிகுவ மெனினே சுவைய

வேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ

மண்ணமை முழவின் பண்ணமை சீறியா

110   ழொண்ணுதல் விறலியர் பாணி தூங்க

மகிழ்ப்பதம் பன்னாட் கழிப்பி யொருநா

ளவிழ்ப்பதங் கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை

முரவை போகிய முரியா வரிசி

விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்

115   பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப

வயின்ற காலைப் பயின்றினி திருந்து

கொல்லை யுழுகொழு வேய்ப்பப் பல்லே

யெல்லையு மிரவு மூன்றின்று மழுங்கி

யுயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனிந் தொருநாட்

120   செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய

செல்வ சேறுமெந் தொல்பதிப் பெயர்ந்தென

மெல்லெனக் கிளந்தன மாக வல்லே

யகறி ரோவெம் மாயம் விட்டெனச்

சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு

125   துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு

பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத்

தன்னறி யளவையிற் றரத்தர யானு

மென்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண்

டின்மை தீர வந்தனென் வென்வே

130   லுருவப் பஃறே ரிளையோன் சிறுவன்

முருகற் சீற்றத் துருகெழு குரிசி

றாய்வயிற் றிருந்து தாய மெய்தி

யெய்யாத் தெவ்வ ரேவல் கேட்பச்

செய்யார் தேஎந் தெருமரல் கலிப்பப்

135   பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி

வெவ்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்குப்

பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்தநன்

னாடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப

வாளி நன்மா னணங்குடைக் குருளை

140   மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி

முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்

தலைக்கோல் வேட்டங் களிறட் டாஅங்

கிரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை

யரவாய் வேம்பி னங்குழைத் தெரியலு

145   மோங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த

விருபெரு வேந்தரு மொருகளத் தவிய

வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட்

கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்

றாணிழன் மருங்கி லணுகுபு குறுகித்

150   தொழுதுமுன் னிற்குவி ராயிற் பழுதின்

றீற்றா விருப்பிற் போற்றுபு நோக்கிநுங்

கையது கேளா வளவை யொய்யெனப்

பாசி வேரின் மாசொடு குறைந்த

துன்னற் சிதாஅர் நீக்கித் தூய

155   கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப்

பெறலருங் கலத்திற் பெட்டாங் குண்கெனப்

பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர

வைகல் வைகல் கைகவி பருகி

யெரியகைந் தன்ன வேடி றாமரை

160   சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி

நூலின் வலவா நுணங்கரின் மாலை

வாலொளி முத்தமொடு பாடினி யணியக்

கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தே

ரூட்டுளை துயல்வர வோரி நுடங்கப்

165   பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்

காலி னேழடிப் பின்சென்று கோலின்

றாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு

பேர்யாழ் முறையுளிக் கழிப்பி நீர்வாய்த்

தண்பணை தழீஇய தளரா விருக்கை

170   நன்பல் லூர நாட்டொடு நன்பல்

வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை

வெருவரு செலவின் வெகுளி வேழந்

தரவிடைத் தங்கலோ விலனே வரவிடைப்

பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்றெனச்

175   செலவுகடைக் கூட்டுதி ராயிற் பலபுலந்து

நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச்

செல்கென விடுக்குவ னல்ல னொல்லெனத்

திரைபிறழிய விரும்பௌவத்துக்

கரைசூழ்ந்த வகன்கிடக்கை

180   மாமாவின் வயின்வயினெற்

றாழ்தாழைத் தண்டண்டலைக்

கூடுகெழீஇய குடிவயினாற்

செஞ்சோற்ற பலிமாந்திய

கருங்காக்கை கவவுமுனையின்

185   மனைநொச்சி நிழலாங்க

ணீற்றியாமைதன் பார்ப்போம்பவு

மிளையோர் வண்ட லயரவு முதியோ

ரவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவு

முடக்காஞ்சிச் செம்மருதின்

190   மடக்கண்ண மயிலாலப்

பைம்பாகற் பழந்துணரிய

செஞ்சுளைய கனிமாந்தி

யறைக்கரும்பி னரிநெல்லி

னினக்களம ரிசைபெருக

195   வறளடும்பி னிவர்பகன்றைத்

தளிர்ப்புன்கின் றாழ்காவி

னனைஞாழலொடு மரங்குழீஇய

வவண்முனையி னகன்றுமாறி

யவிழ்தளவி னகன்றோன்றி

200   நகுமுல்லை யுகுதேறுவீப்

பொற்கொன்றை மணிக்காயா

நற்புறவி னடைமுனையிற்

சுறவழங்கு மிரும்பௌவத்

திறவருந்திய வினநாரை

205   பூம்புன்னைச் சினைச்சேப்பி

னோங்குதிரை யொலிவெரீஇத்

தீம்பெண்ணை மடற்சேப்பவுங்

கோட்டெங்கின் குலைவாழைக்

கொழுங்காந்தண் மலர்நாகத்துத்

210   துடிக்குடிஞைக் குடிப்பாக்கத்

தியாழ்வண்டின் கொளைக்கேற்பக்

கலவம்விரித்த மடமஞ்ஞை

நிலவெக்கர்ப் பலபெயரத்

தேனெய்யொடு கிழங்குமாறியோர்

215   மீனெய்யொடு நறவுமறுகவுந்

தீங்கரும்போ டவல்வகுத்தோர்

மான்குறையொடு மதுமறுகவுங்

குறிஞ்சி பரதவர் பாட நெய்த

னறும்பூங் கண்ணி குறவர் சூடக்

220   கானவர் மருதம் பாட வகவர்

நீனிற முல்லைப் பஃறிணை நுவலக்

கானக்கோழி கதிர்குத்த

மனைக்கோழி தினைக்கவர

வரைமந்தி கழிமூழ்கக்

225   கழிநாரை வரையிறுப்பத்

தண்வைப்பினா னாடுகுழீஇ

மண்மருங்கினான் மறுவின்றி

யொருகுடையா னொன்றுகூறப்

பெரிதாண்ட பெருங்கேண்மை

230   யறனொடு புணர்ந்த திறனறி செங்கோ

லன்னோன் வாழி வென்வேற் குருசில்

மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மா

ணெல்லை தருநன் பல்கதிர்ப் பரப்பிக்

குல்லை கரியவுங் கோடெரி நைப்பவு

235   மருவி மாமலை நிழத்தவு மற்றக்

கருவி வானங் கடற்கோண் மறப்பவும்

பெருவற னாகிய பண்பில் காலையு

நறையு நரந்தமு மகிலு மாரமுந்

துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி

240   நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும்

புனலாடு மகளிர் கதுமெனக் குடையக்

கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து

சூடுகோ டாகப் பிறக்கி நாடொருங்

குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை

245   கடுந்தெற்று மூடையி னிடங்கெடக் கிடக்குஞ்

சாலி நெல்லின் சிறைகொள் வேலி

யாயிரம் விளையுட் டாகக்

காவிரி புரக்கு நாடுகிழ வோனே

 

No comments:

Post a Comment