முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.

Thursday, March 19, 2015

நெடுநல்வாடை-மரபு மூலம்


நெடுநல்வாடை
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

 

வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
வார்கலி முனைஇய கொடுங்கோற் கோவல
ரேறுடை யினநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோட                          5
னீடிதழ்க் கண்ணி நீரலைக் களாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
மாமேயன் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை                                         10       
கன்றுகோ ளொழியக் கடிய வீசிக்
குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாட்
புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப்
பொன்போற் பீரமொடு புதற்புதன் மலரப்
பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி                    15
யிருங்களி பரந்த வீர வெண்மணற்
செவ்வரி நாரையோ டெவ்வாயுங் கவரக்
கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்ப்
பெயலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை
யகலிரு விசும்பிற் றுவலை கற்ப                                    20
வங்க ணகல்வய லார்பெயற் கலித்த
வண்டோட்டு நெல்லின் வருகதிர் வணங்க
முழுமுதற் கமுகின் மணியுற ழெருத்திற்
கொழுமட லவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
நுண்ணீர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு                          25



தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற
நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக்
குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க
மாட மோங்கிய மல்லன் மூதூ
ராறுகிடந் தன்ன வகனெடுந் தெருவிற்                            30
படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோண்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
வண்டுமூசு தேறன் மாந்தி மகிழ்சிறந்து
துவலைத் தண்டுளி பேணார் பகலிறந்
திருகோட் டறுவையர் வேண்டுவயிற் றிரிதர                 35
வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோண்
மெத்தென் சாயன் முத்துறழ் முறுவற்
பூங்குழைக் கமர்ந்த வேந்தெழின் மழைக்கண்
மடவரன் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்                           40
தவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்
திரும்புசெய் விளக்கி னீர்ந்திரிக் கொளீஇ
நெல்லு மலருந் தூஉய்க்கை தொழுது
மல்ல லாவண மாலை யயர
மனையுறை புறவின் செங்காற் சேவ                              45
லின்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணா
திரவும் பகலு மயங்கிக் கையற்று
மதலைப் பள்ளி மாறுவன விருப்பக்
கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர்
கொள்ளுறழ் நறுங்கற் பலகூட்டு மறுக                           50
வடவர் தந்த வான்கேழ் வட்டந்
தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக்
கூந்தன் மகளிர் கோதை புனையார்
பல்லிருங் கூந்தற் சின்மலர் பெய்ம்மார்
தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத்                             55
திருங்கா ழகிலொடு வெள்ளயிர் புகைப்பக்
கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வானூல் வலந்தன தூங்க
வானுற நிவந்த மேனிலை மருங்கின்                              60
வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர்வாய்க் கதவந் தாழொடு துறப்பக்
கல்லென் றுவலை தூவலின் யாவருந்
தொகுவாய்க் கன்னற் றண்ணீ ருண்ணார்                        65
பகுவாய்த் தடவிற் செந்நெருப் பார
வாடன் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
தண்மையிற் றிரிந்த வின்குரற் றீந்தொடை
கொம்மை வருமுலை வெம்மையிற் றடைஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்பக்           70
காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல்கனைந்து
கூதிர்நின் றன்றாற் போதே மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டில
மிருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்
பொருதிறஞ் சாரா வரைநா ளமயத்து                              75
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வ நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்
தொருங்குடன் வளைஇ யோங்குநிலை வரைப்பிற்
பருவிரும்பு பிணித்துச் செவ்வரக் குரீஇத்                      80
துணைமாண் கதவம் பொருத்தி யிணைமாண்டு
நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்
தாழொடு குயின்ற போரமை புணர்ப்பிற்
கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்                        85
தையவி யப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றெழு கொடியொடு வேழஞ் சென்றுபுகக்
குன்றுகுயின் றன்ன வோங்குநிலை வாயிற்
றிருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பிற்
றருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து                        90
நெடுமயி ரெகினத் தூநிற வேற்றை
குறுங்கா லன்னமோ டுகளு முன்கடைப்
பணைநிலை முனைஇய பல்லுளைப் புரவி
புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிலவுப்பயன் கொள்ளு நெடுவெண் முற்றத்துக்             95
கிம்புரிப் பகுவா யம்பண நிறையக்
கலிழ்ந்துவீ ழருவிப் பாடுவிறந் தயல
வொலிநெடும் பீலி யொல்க மெல்லியற்
கலிமயி லகவும் வயிர்மரு ளின்னிசை
நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில்                        100
யவன ரியற்றிய வினைமாண் பாவை
கையேந் தையக னிறையநெய் சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி
யறுவறு காலைதோ றமைவரப் பண்ணிப்
பல்வேறு பள்ளிதொறும் பாயிரு ணீங்கப்                        105
பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்ல
தாடவர் குறுகா வருங்கடி வரைப்பின்
வரைகண் டன்ன தோன்றல வரைசேர்பு
வில்கிடந் தன்ன கொடிய பல்வயின்
வெள்ளி யன்ன விளங்குஞ் சுதையுரீஇ                           110
மணிகண் டன்ன மாத்திரட் டிண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவ
ருருவப் பல்பூ வொருகொடி வளைஇக்
கருவொடு பெயரிய காண்பி னல்லிற்
றசநான் கெய்திய பணைமரு ணோன்றா                        115
ளிகன்மீக் கூறு மேந்தெழில் வரிநுதற்
பொருதொழி நாக மொழியெயி றருகெறிந்து
சீருஞ் செம்மையு மொப்ப வல்லோன்
கூருளிக் குயின்ற வீரிலை யிடையிடுபு
தூங்கியன் மகளிர் வீங்குமுலை கடுப்பப்                        120
புடைதிரண் டிருந்த குடத்த விடைதிரண்
டுள்ளி நோன்முதல் பொருத்தி யடியமைத்துப்
பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில்
மடைமா ணுண்ணிழை பொலியத் தொடைமாண்டு
முத்துடைச் சாலேக நாற்றிக் குத்துறுத்துப்                     125
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண் புதையக் கொளீஇத் துகடீர்ந்
தூட்டுறு பன்மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து
முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்து                            130
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணைபுண ரன்னத் தூநிறத் தூவி
யிணையணை மேம்படப் பாயணை யிட்டுக்
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமை தூமடி விரித்த சேக்கை                                   135
யாரந் தாங்கிய வலர்முலை யாகத்துப்
பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
நன்னுத லுலறிய சின்மெல் லோதி
நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண்
வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற்                             140
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகின் மரீஇய வேந்துகோட் டல்கு                             145
லம்மா சூர்ந்த வவிர்நூற் கலிங்கமொடு
புனையா வோவியங் கடுப்பப் புனைவி
றளிரேர் மேனித் தாய சுணங்கி
னம்பணைத் தடைஇய மென்றோண் முகிழ்முலை
வம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின்                    150
மெல்லியன் மகளிர் நல்லடி வருட
நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்
குறியவு நெடியவு முரைபல பயிற்றி
யின்னே வருகுவ ரின்றுணை யோரென                        155
வுகத்தவை மொழியவு மொல்லாண் மிகக்கலுழ்ந்து
நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கா
லூறா வறுமுலை கொளீஇய காறிருத்திப்
புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்ணிலை மருப்பி னாடுதலை யாக                            160
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலன் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
வுரோகிணி நினைவன ணோக்கி நெடிதுயிரா
மாயித ழேந்திய மலிந்துவீ ழரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப்            165
புலம்பொடு வதியு நலங்கிள ரரிவைக்
கின்னா வரும்படர் தீர விறறந்
தின்னே முடிகதில் லம்ம மின்னவி
ரோடையொடு பொலிந்த வினைநவில் யானை
நீடிர டடக்கை நிலமிசைப் புரள                                         170
களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவ
ரொளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து
வடந்தைத் தண்வளி யெறிதொறு நுடங்கித்
தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல்
பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல                              175
வேம்புதலை யாத்த நோன்கா ழெஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்
மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு
பருமங் களையாப் பாய்பரிக் கலிமா
விருஞ்சேற்றுத் தெருவி னெறிதுளி விதிர்ப்பப்              180
புடைவீ ழந்துகி லிடவயிற் றழீஇ
வாடோட் கோத்த வன்கட் காளை
சுவன்மிசை யமைத்த கையன் முகனமர்ந்து
நூல்கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப                              185
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே
 

 

No comments:

Post a Comment