முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.

Wednesday, March 18, 2015

திருமுருகாற்றுப்படை-மரபு மூலம்


திருமுருகாற்றுப்படை
மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர்

     உலக முவப்ப வலனேர்பு திரிதரு
     பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
     கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி
     யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்
5 செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
     மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
     கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை
     வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்
     தலைப்பெய றலைஇய தண்ணறுங் கானத்
10 திருள்படப் பொதுளிய பராரை மராஅத்
     துருள்பூந் தண்டார் புரளு மார்பினன்
     மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்
     கிண்கிணி கவைஇய வொண்செஞ் சீறடிக்
     கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோட்
15கோபத் தன்ன தோயாப் பூந்துகிற்
     பல்காசு நிரைத்த சில்கா ழல்குற்
     கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பி
     னாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச்
     சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித்
20 துணையோ ராய்ந்த விணையீ ரோதிச்
     செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு
     பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
     தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
     திலகந் தைஇய தேங்கமழ் திருநுதன்
25 மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத்
     துவர முடித்த துகளறு முச்சிப்
     பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்
     டுளைப்பூ மருதி னொள்ளிண ரட்டிக்
     கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்
30 பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக
     வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர்
     நுண்பூ ணாகந் திளைப்பத் திண்காழ்
     நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
     தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்
35 குவிமுகி ழிளமுலைக் கொட்டி விரிமலர்
     வேங்கை நுண்டா தப்பிக் காண்வர
     வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
     கோழி யோங்கிய வென்றடு விறற்கொடி
     வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
40 சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச்
     சூரர மகளி ராடுஞ் சோலை
     மந்தியு மறியா மரன்பயி லடுக்கத்துச்
     சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தட்
     பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
45 பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச்
     சூர்முத றடிந்த சுடரிலை நெடுவே
     லுலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்
     சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்
     கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
50 பெருமுலை யலைக்குங் காதிற் பிணர்மோட்
     டுருகெழு செலவி னஞ்சுவரு பேய்மகள்
     குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரற்
     கண்டொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
     யொண்டொடித் தடக்கையி னேந்தி வெருவர
55 வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா
     நிணந்தின் வாய டுணங்கை தூங்க
     விருபே ருருவி னொருபே ரியாக்கை
     யறுவேறு வகையி னஞ்சுவர மண்டி
     யவுணர் நல்வல மடங்கக் கவிழிணர்
60 மாமுத றடிந்த மறுவில் கொற்றத்
     தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்
     சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு
     நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையுஞ்
     செலவுநீ நயந்தனை யாயிற் பலவுட
65 னன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப
     வின்னே பெறுதிநீ முன்னிய வினையே
     செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி
     வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
     பொருநர்த் தேய்த்த போரரு வாயிற்
70 றிருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து
     மாடமலி மறுகிற் கூடற் குடவயி
     னிருஞ்சேற் றகல்வயல் விரிந்துவா யவிழ்ந்த
     முட்டாட் டாமரைத் துஞ்சி வைகறைக்
     கட்கமழ் நெய்த லூதி யெற்படக்
75 கண்போன் மலர்ந்த காமரு சுனைமல
     ரஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்குங்
     குன்றமர்ந் துறைதலு முரிய னதாஅன்று
     வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
     வாடா மாலை யோடையொடு துயல்வரப்
80 படுமணி யிரட்டு மருங்கிற் கடுநடைக்
     கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்
     கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்
     டைவே றுருவிற் செய்வினை முற்றிய
     முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
85 மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப
     நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
     சேண்விளங் கியற்கை வாண்மதி கவைஇ
     யகலா மீனி னவிர்வன விமைப்பத்
     தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார்
90 மனனேர் பெழுதரு வாணிற முகனே
     மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப்
     பல்கதிர் விரிந்தன் றொருமுக மொருமுக
     மார்வல ரேத்த வமர்ந்தினி தொழுகிக்
     காதலி னுவந்து வரங்கொடுத் தன்றே யொருமுக
95 மந்திர விதியின் மரபுளி வழாஅ
     வந்தணர் வேள்வியோர்க் கும்மே யொருமுக
     மெஞ்சிய பொருள்களை யேமுற நாடித்
     திங்கள் போலத் திசைவிளக் கும்மே யொருமுகஞ்
     செறுநர்த் தேய்த்துச் செல்சம முருக்கிக்
100 கறுவுகொ ணெஞ்சமொடு களம்வேட் டன்றே யொருமுகங்
     குறவர் மடமகள் கொடிபோ னுசுப்பின்
     மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே
     யாங்கம் மூவிரு முகனு முறைநவின் றொழுகலி
     னாரந் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற்
105    செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலன் மரபி னையர்க் கேந்திய
தொருகை யுக்கஞ் சேர்த்திய தொருகை
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை யசைஇய தொருகை
110    யங்குசங் கடாவ வொருகை யிருகை
யையிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப வொருகை
மார்பொடு விளங்க வொருகை
தாரொடு பொலிய வொருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப வொருகை
115    பாடின் படுமணி யிரட்ட வொருகை
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய வொருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட
வாங்கப் பன்னிரு கையும் பாற்பட வியற்றி
யந்தரப் பல்லியங் கறங்கத் திண்காழ்
120    வயிரெழுந் திசைப்ப வால்வளை ஞரல
வுரந்தலைக் கொண்ட வுருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ
விசும்பா றாக விரைசெலன் முன்னி
யுலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீ
125    ரலைவாய்ச் சேறலு நிலைஇய பண்பே யதாஅன்று
சீரை தைஇய வுடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வானரை முடியினர்
மாசற விமைக்கு முருவினர் மானி
னுரிவை தைஇய வூன்கெடு மார்பி
130    னென்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற்
பலவுடன் கழிந்த வுண்டிய ரிகலொடு
செற்ற நீக்கிய மனத்தின ரியாவதுங்
கற்றோ ரறியா வறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு
135    கடுஞ்சினங் கடிந்த காட்சிய ரிடும்பை
யாவது மறியா வியல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புகப்
புகைமுகந் தன்ன மாசி றூவுடை
முகைவா யவிழ்ந்த தகைசூ ழாகத்துச்
140    செவிநேர்பு வைத்த செய்வுறு திவவி
னல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவல ரின்னரம் புளர
நோயின் றியன்ற யாக்கையர் மாவி
னவிர்தளிர் புரையு மேனிய ரவிர்தொறும்
145    பொன்னுரை கடுக்குந் திதலைய ரின்னகைப்
பருமந் தாங்கிய பணிந்தேந் தல்குன்
மாசின் மகளிரொடு மறுவின்றி விளங்கக்
கடுவொ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்
றழலென வுயிர்க்கு மஞ்சுவரு கடுந்திறற்
150    பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு
வலவயி னுயரிய பலர்புகழ் திணிதோ
ளுமையமர்ந்து விளங்கு மிமையா முக்கண்
மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனு
155    நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்
தீரிரண் டேந்திய மருப்பி னெழினடைத்
தாழ்பெருந் தடக்கை யுயர்த்த யானை
யெருத்த மேறிய திருக்கிளர் செல்வனு
160    நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய
வுலகங் காக்கு மொன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவருந் தலைவ ராக
வேமுறு ஞாலந் தன்னிற் றோன்றித்
தாமரை பயந்த தாவி லூழி
165    நான்முக வொருவற் சுட்டிக் காண்வரப்
பகலிற் றோன்று மிகலில் காட்சி
நால்வே றியற்கைப் பதினொரு மூவரொ
டொன்பதிற் றிரட்டி யுயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
170    வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத்
தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட
வுருமிடித் தன்ன குரலினர் விழுமிய
வுறுகுறை மருங்கிற்றம் பெறுமுறை கொண்மா
ரந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
175    தாவில் கொள்கை மடந்தையொடு சின்னா
ளாவி னன்குடி யசைதலு முரிய னதாஅன்
றிருமூன் றெய்திய வியல்பினின் வழாஅ
திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்கொடி
யறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்
180    டாறினிற் கழிப்பிய வறனவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
வொன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர வுடீஇ
185    யுச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்
தாறெழுத் தடக்கிய வருமறைக் கேள்வி
நாவியன் மருங்கி னவிலப் பாடி
விரையுறு நறுமல ரேந்திப் பெரிதுவந்
தேரகத் துறைதலு முரிய னதாஅன்று
190    பைங்கொடி நறைக்கா யிடையிடுபு வேல
னம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந் தொடுத்த கண்ணிய
னறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
195    நீடமை விளைந்த தேக்கட் டேறற்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை யயர
விரலுளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்காற்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
200    யிணைத்த கோதை யணைத்த கூந்தன்
முடித்த குல்லை யிலையுடை நறும்பூச்
செங்கான் மராஅத்த வாலிண ரிடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகா ழல்கு றிளைப்ப வுடீஇ
205    மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு
செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழனினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
210    றகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்
கொடிய னெடியன் றொடியணி தோள
னரம்பார்த் தன்ன வின்குரற் றொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயன்
மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்
215    முழவுறழ் தடக்கையி னியல வேந்தி
மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதொ றாடலு நின்றதன் பண்பே யதாஅன்று
சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
220    யூரூர் கொண்ட சீர்கெழு விழவினு
மார்வல ரேத்த மேவரு நிலையினும்
வேலன் றைஇய வெறியயர் களனுங்
காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்புஞ்
225    சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பு
மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினு
மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவர
நெய்யோ டையவி யப்பி யைதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
230    முரண்கொ ளுருவி னிரண்டுட னுடீஇச்
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி
சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்
235    சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையற வறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பி னன்னகர் வாழ்த்தி
நறும்புகை யெடுத்துக் குறிஞ்சி பாடி
240    யிமிழிசை யருவியொ டின்னியங் கறங்க
வுருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகண்
முருகிய நிறுத்து முரணின ருட்க
முருகாற்றுப் படுத்த வுருகெழு வியனக
245    ராடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோதுவாய் வைத்துக் கொடுமணி யியக்கி
யோடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட
வாண்டாண் டுறைதலு மறிந்த வாறே
250    யாண்டாண் டாயினு மாக காண்டக
முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி
நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை
யைவரு ளொருவ னங்கை யேற்ப
255    வறுவர் பயந்த வாறமர் செல்வ
வால்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகண் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
விழையணி சிறப்பிற் பழையோள் குழவி
260    வானோர் வணங்குவிற் றானைத் தலைவ
மாலை மார்ப நூலறி புலவ
செருவி லொருவ பொருவிறன் மள்ள
வந்தணர் வெறுக்கை யறிந்தோர் சொன்மலை
மங்கையர் கணவ மைந்த ரேறே
265    வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ
குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே
யரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக
270    நசையுநர்க் கார்த்து மிசைபே ராள
வலர்ந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய்
மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப்
பரிசிலர்த் தாங்கு முருகெழு நெடுவேஎள்
பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள்
275    சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி
போர்மிகு பொருந குருசி லெனப்பல
யானறி யளவையி னேத்தி யானாது
நின்னளந் தறிதன் மன்னுயிர்க் கருமையி
னின்னடி யுள்ளி வந்தனெ னின்னொடு
280    புரையுந ரில்லாப் புலமை யோயெனக்
குறித்தது மொழியா வளவையிற் குறித்துடன்
வேறுபல் லுருவிற் குறும்பல் கூளியர்
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
யளியன் றானே முதுவா யிரவலன்
285    வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென
வினயவு நல்லவு நனிபல வேத்தித்
தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்
வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி
யணங்குசா லுயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
290    மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி
யஞ்ச லோம்புமதி யறிவனின் வரவென
வன்புடை நன்மொழி யளைஇ விளிவின்
றிருணிற முந்நீர் வளைஇய வுலகத்
தொருநீ யாகித் தோன்ற விழுமிய
295    பெறலரும் பரிசி னல்குமதி பலவுடன்
வேறுபஃ றுகிலி னுடங்கி யகில்சுமந்
தார முழுமுத லுருட்டி வேரற்
பூவுடை யலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
300    தண்கம ழலரிறால் சிதைய நன்பல
வாசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமல ருதிர யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுத
லிரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
305    முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று
நன்பொன் மணிநிறங் கிளரப்பொன் கொழியா
வாழை முழுமுத றுமியத் தாழை
யிளநீர் விழுக்குலை யுதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
310    மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப்பெடை யிரியக் கேழலொ
டிரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன
குரூஉமயி ரியாக்கைக் குடாவடி யுளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்
315    டாமா நல்லேறு சிலைப்பச் சேணின்
றிழுமென விழிதரு மருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே
 

No comments:

Post a Comment